அறியாத வயதில்...

கவிதை என்றால் என்னவென்று அறியாத வயதில் - சொல்லின் கீழ் சொல்லடுக்கிச் சொல்வதுதான் கவிதை என்று நான் நினைத்திருந்த அந்த மாணவப் பருவத்தில் கவிதை என்று எண்ணி நான் எழுதியவையே என் மனசின் இந்தப் பக்கங்களில் இருக்கின்றன. இவற்றைப் படித்துவிட்டு 'இதுபோல் இவன் இன்னும் எழுதுவானோ?' என்று யாரும் பயப்பட வேண்டாம். உண்மையான கவிதை இலக்கியம் எது என்று தெரிந்து கொண்ட அந்த நாளிலேயே இப்படித் தத்துப் பித்தென்று எதையாவது எழுதி கவிதை என்று சொல்லி இறுமாந்து போகும் குழந்தைத் தனத்தை நிறுத்திவிட்டேன். நாட்குறிப்பின் பக்கங்களில் செல்லரித்துக் கொண்டிருந்தவற்றை மின்பக்கங்களில் பத்திரப் படுத்தியாவது வைப்போமே என்றுதான்.......வேறொன்றுமில்லை. பல கவிதைகளை (ஏற்கனவே வச்ச பேரை இப்ப மாத்த மனசு வரல) இன்று படிக்கும் போது இது எத்தனை சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று எனக்குத் தோனுவதுண்டு. ஆனாலும் பழைய நினைவுகள் மலரும்போது அது வீசும் மணம் மனசுக்கு இதமாக இருப்பது இயல்புதானே.
என் மலரும் நினைவுகளான‌
என் நாட்குறிப்புக் கவிதைகள்(?!!!) இவை:

எல்லா வானத்திலும்
நட்சத்திரங்கள் உதிரும்போது
என் வானத்தில் மட்டும்
நிலா உதிர்கிறது.

               உன் கூந்தலுக்காய்
               விட்டுவைத்த மொட்டுக்கள்
               பூக்களைத் தருவதில்லை.

நீ
உன் வாசலில்
கொட்டிப்போன குப்பையில்
உன் மனதைத் தேடும்போது
என் மனது கிடைக்கிறது.

               ஊசிக்கால் ஊன்றி
               ஊரைக் கடந்துபோகும்
               ஒரு சிறுதூறல்
               நீ 
              என்னைக் கடந்து போகையில்.

இப்பொழுதெல்லாம்
நிலவை மையம்கொண்டு
பூமி சுற்றுகிறது.

               நீ
               கூட்டிப் பெருக்கிய கணக்கில்
               சேர்த்துக் கழித்த
               சூன்யம் நான்.

வார்த்தைகளை விழுங்கும்
வாக்கியம் நான் - அதில்
வந்துவிழும்
வார்த்தைகள் நீ.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கனவின் கனவில் வரும் தேவதை

என்
கனவில் வரும் கனவுகளில்
மின்னல் கீற்றாய் ஒரு புன்னகை;
தென்றல் காற்றாய் ஒரு ஸ்பரிசம்;
தாயின் கரம்போல் அரவணைப்பு.

அத்தனையும் இழுத்துப் பிடித்து
நினைவுகளில் நிறுத்திக் கொள்ள‌
மனதுக்குள் மன்றாடுகிறேன்.

ஒன்று சிக்கினால்...
மற்றொன்று
கை நழுவிப் போகின்றது.

ஒன்றைப் பிடித்தால்...
மற்றொன்று
நினைவு தப்பிப் போகின்றது.

முடிவில் அந்தப் புன்னகை.
                              ஸ்பரிசம்.
                              அரவணைப்பு.
அத்தனையும் என்னுள்ளே
எங்கோ காணாமல் போகின்றன‌
விடியும் அந்த ஓர் நாழிகையில்.

நினைவு இறகெடுத்து
மௌன மை தொட்டு
மனமென்னும் மாயத்திரையில்
அவள் முகத்தை
வரைந்து வரைந்து பார்க்கின்றேன்.
ஒவ்வொருமுறையும் - அது
கலைந்து கலைந்து போகின்றது.

சிலநேரங்களில்
காற்றில் கரைந்து
காணாமல் போகின்றது.

சில நேரங்களில்
எங்கிருந்தோ வந்த அலைகளில்
அழிந்து போகின்றது.

இன்னும் பல நேரங்களில்
அவள் கண்ணீரில்
கரைந்து போகின்றது.

என்ன முயன்றும்
முடிவில் நான்
தோற்றுத் தோற்றுப் போகின்றேன்.

மீண்டும்...
கண்மூடித் தூங்குகிறேன்...
மீண்டும் அவள் முகம் வரைய.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தாகத்திற்கு
கானல்நீர் பருகி,
பசிக்குத்
தேவாமிர்தம் புசித்து,
கற்பகதருவில்
இளைப்பாரும்
இந்தியக் குடிமகன்

               ஓ! சமூகமே!
               அரசாங்கம்கூட‌
               மக்களுக்கு உதவுவதில்
               பொருளாதாரம் பார்ப்பதில்லை
               சாதியை மட்டுமே
               பார்க்கிறது.
               நீ மட்டும் ஏன்
               சிரிப்பதற்கும் கூட‌
               பொருளாதாரம் பார்க்கிறாய்.

பந்த் - இது
ஆளும்கட்சி உதைத்தாலும்
எதிர்க்கட்சி உதைத்தாலும்
மோதுவதென்னவோ
மக்கள் மீதுதான்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

வாழ்க்கைப் போராட்டம்

பலநாள் போராட்டத்தில்
நேற்றுத்தான் கிடைத்தது
கூலி உயர்வு.

அநாவசியத் தேவையென்று
ஒதுக்கி வைத்திருந்த‌
அத்தியாவசியத் தேவைகளெல்லாம்
ஒன்றையொன்று
முந்திக்கொண்டு
ஓடிவந்தன.

சில அவசியங்கள்
அங்கீகரிக்கப்பட்டன.
பிற அவசியங்கள்
அநாவசியங்களாக்கப் பட்டன.

அவசியங்களை
அநாவசியங்களாக்கிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கிறது
இந்த வாழ்க்கை.

சாகும்போதுகூட‌
சில அவசியங்களை
அநாவசியங்களென‌
ஒதுக்கிவிட்டுத்தான்
இறந்து போவேனோ!

அவசியங்களையும்
அத்தியாவசியங்களாக்கும்
அற்புத உலகம்
எப்போது வரும்?

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஓர் இந்திய (சுதந்திர)க் கனவு

ஓவியன் கனவு கண்டால்
தூரிகைகள் தோரணம் கட்டும்.
சிற்பிகள் கனவு கண்டால்
சிற்றுளிகள் சிலை வடிக்கும்.
கவிஞன் கனவு கண்டால்
கவிதைகள் கருத்தரிக்கும்.
இந்தியன் கனவு கண்டான்
இருப்பதெல்லாம் களவாடப்பட்டது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மௌனம்!
பேசாமல் பேசும் பொன்மொழி.
மௌனத்தின் பாஷை எனக்குத் தெரியாது.
ஏனெனில் 
மௌனம் எப்போதும் பேசுவதில்லை-
மனிதர்கள் இன்னமும் பேசிக் கொண்டிருப்பதால்.
உலகம் ஒருநாள் ஊமையாகிப்போனால்
மௌனம் மொழி பேசலாம்.
ஆனால் அப்போது
அதன் பொருள் அகராதியில் இருக்காது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கனவு

தூங்கா விளக்கோடு,
தூண்டில் முள்ளோடு,
விழிக்காத விழியோடு,
விடியும்வரை
காத்திருந்தேன்.
வெறுங்கூடை
வீடு நடந்தது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

விழிப்பாயிரு

கவிதை சொல்லி,
காதல் சொல்லி,
கணம் தோறும்
கனவில் மூழ்கி
காதல் நினைவில்
காலம் கழித்துக்
கண் விழித்துப்
பார்க்கையில்...
காலம்
உனை மறந்து
காதல் தூரம்
போயிருக்கும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

என் கல்லூரி வழ்க்கையின் இறுதிநாட்களில் பிரிவாற்றாமையால் வகுப்பறையின் கரும்பலகையில் புலம்பியவை:

இன்னும் இரண்டு மாதங்கள்,
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்
சருகாகப் போகும் நேரம்.
கடந்து செல்லும்
கணங்கள் ஒவ்வொன்றும்
கனவிலும் திரும்பவராது.
நகர்ந்து செல்லும்
நாட்கள் ஒவ்வொன்றும்
நெஞ்சைவிட்டு நீங்காது
அனுபவித்துப் பாருங்கள்
ஆயுளுக்கும் மறக்காது.

               நாங்கள்
               பிரிந்து போகிறோம்...
               நாளைய நாட்கள்
               நெஞ்சினில் இனிக்க,
               நேற்றைய நினைவுகள்
               கனவாய் இருக்க,
               இன்றைய இழப்பு
               கண்களை நிறைக்க,
               நாங்கள்
               பிரிந்து போகிறோம்.

நாளை-
இந்தக் கல்லூரி இருக்கும்
நாங்கள் இருக்க மாட்டோம்.
வேர்கள் மட்டும் இருக்கும்
விழுதுகள் இருக்காது.

என் கல்லூரிச் சோலையே!
உன்
வாழ்வுக்கு வந்த வசந்தம்
முடிவுக்கு வந்துவிட்டது.
இனி வரப்போவது
இலையுதிர்காலம்.
உதிர்ப்பதற்குத் தயாராக இரு!
இலைகளை அல்ல,
எங்களை.

இன்னும் கொஞ்சம் இருக்குதுங்க‌..........

No comments:

Post a Comment