ஜாதி உணர்வுகள்
ஊட்டி வளர்க்கும் - ஒரு
ஜாதி விடுதலைப் போராட்டம்.
இன உணர்வுகள்
இறுகப் பற்றும் - ஒரு
இன விடுதலைப் போராட்டம்.
மத உணர்வுகள்
மதித்துப் போற்றும் - ஒரு
மதச்சார்பற்ற போராட்டம்.
வட்டப் பாதையின்
பயணம் இது
முடியும் புள்ளி
ஒன்றுண்டோ!
வட்டப் பாதையின்
பயணம் முடித்து
வர்க்கப் பாதை
வருவோமென்று
போனவரெல்லாம் போனாரே...
மாண்டார் மீண்டு
வரமாட்டார் - தடம்
புரண்டார் மட்டும்
வருவாரோ!
No comments:
Post a Comment